Saturday, September 10, 2011

தாசில்தார் தேர்

ரெண்டு ஆள் உயர‌ம் : ‍ ஆனால்
ந‌க‌ராத‌ ச‌க்க‌ரம்.


எப்போதோ
உற்ச‌வ‌ர் சும‌ந்து
ஊர் சுற்றி வ‌ந்த‌ பெருமை.


பிர‌தேச‌த்தின் அடையாள‌மாய்
இருப்பின் பெருமித‌ம்.


வேரில்லாத, கிளையில்லாத‌
ம‌க்கிய‌ ம‌ரமாக‌


வ‌ராத‌ திருவிழாவை
எதிர்நோக்கி


வீதியின் முடிவில் தேரும்,
விதியின் முடிவில்


வீட்டுத் திண்ணையில்
தாசில்தார் தாத்தாவும்
\

1 comments: