Wednesday, August 31, 2011

இன்னும் கொஞ்ச‌ம்

இன்னும் கொஞ்ச‌ம் உய‌ர‌மாக‌
இன்னும் கொஞ்ச‌ம் பெரிய‌ வ‌ண்டியோடு
இன்னும் கொஞ்ச‌ம் முடி வெளுக்காம‌ல்
இன்னும் கொஞ்ச‌ம் காசோடு
இன்னும் கொஞ்ச‌ம் வேறு வேலையில்
இன்னும் கொஞ்ச‌ம் க‌ட‌னில்லாம‌ல்
இன்னும் கொஞ்ச‌ம் வெளிநாட்டில்
இன்னும் கொஞ்ச‌ம் த‌ங்க‌ம் சேர்த்து
இன்னும் கொஞ்ச‌ம் புரித‌லோடு

இப்படி ஏதும்
சிந்திக்காம‌ல்

குறைந்தது..
இன்னும் கொஞ்ச‌ம்
வாழ்ந்தாவ‌து தொலைத்திருக்க‌லாம்

சாவ‌காச‌மாக‌

0 comments:

Post a Comment